வரவு செலவுத் திட்டத்திற்கான செல்வத்தின் ஆதரவு தனிப்பட்ட முடிவு

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வாக்களித்தமை அவரது தனிப்பட்ட முடிவேயொழிய கட்சியின் முடிவல்ல என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வாக்களித்தமை அனுர அரசாங்கத்திற்கு ஆதரவான கட்சியின் நிலைப்பாட்டை குறிக்குமா என்பது தொடர்பில் யாழில் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் மூன்று விதமான முடிவுகள் தமிழ் தரப்பில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு கட்சி ஆதரவாகவும் இன்னொரு கட்சி எதிராகவும் வாக்களித்ததுடன் மற்றொரு கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இது கூட்டான வாக்களிப்பும் அல்ல.
வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்புக்கு முன்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பேசி ஒரு முடிவுக்கு வரும் – என்றார்.
![]()