இலங்கை

நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் கலந்துரையாடப்படும் – ஜெனிவாவில் விஜித தெரிவிப்பு

உள்ளகப்பொறிமுறைகள் மேலும் வலுப்படுத்தப்படுவதுடன், அவை சுயாதீனமானதும், நம்பகத்தன்மை வாய்ந்த முறைமையிலும் இயங்குவது உறுதிசெய்யப்படும்.

அதேபோன்று சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும்.

இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரிப்பதற்கான ஆணை அக்கட்டமைப்புக்கு வழங்கப்படும். இவ்வாறு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும், நம்பகமான முறையிலும் இயங்கும்.

அத்துடன் எமது நாடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளடங்கலாக ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களிலும், உபகுழுக்களிலும் அங்கம் வகிக்கின்றது.

அக்குழுக்களினால் மேற்கொள்ளப்படும் கூட்டங்கள் மற்றும் மீளாய்வுகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிப் பங்கேற்கிறது. நாட்டின் தேசிய சட்டதிட்டங்களுக்கு அமைவாக இந்த ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்” என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *