முகநூல்

“சீமானுடன் 1000துரோகிகளும்,100தம்பிகளும்”

2015 இறுதி அல்லது 2016என்று நினைக்கிறேன் நான் அப்போது சென்னையில் ஒரு broadband கம்பெனியில் வேலை செய்து கொண்டு இருந்தேன்..
அப்போது அண்ணன் சீமான் சூப்பர்ஸ்டார் #ரஜினி அரசியலில் நின்றால் அவரை எதிர்த்து நிற்பேன் என்று ஒரு செய்தி அல்லது அறிக்கை என்று நெனைக்கிறேன் ( சரியாக நினைவில் இல்லை )
அப்போதுதான் முதன் முதலில் அண்ணன் சீமான் பற்றி எனக்கு தெரியும், அந்த நேரத்தில் அவரை கிண்டல் செய்தவர்களில் நானும் ஒருவன்…
பிறகு அவரை பற்றி youtube இல் அதிகமாக தேடி தேடி பார்ப்பேன்.. எங்கள் கம்பெனியில் எங்களுக்கு net எப்போதும் இலவசம்..
அப்போது நான் அம்மா #ஜெயலலிதா கட்சிக்கு வாக்காளித்து இருந்தேன்.. என் முதல் வாக்கும் அவர்கள் கூட்டணியில் இருந்த தே மு தி க கட்சிக்கு…
சரியாக 2 நாள் கூட அண்ணன் காணொளி பார்த்து இருக்க மாட்டேன், நாம் தமிழர் கட்சிக்கு இணையதளம் மூலம் உறுப்பினர் அட்டை பதிவு செய்தேன்.. எங்கள் தொகுதியில் நான்தான் முதல் உறுப்பினர் அட்டை வாங்கி இருக்கிறேன் என்பது இன்றும் எனக்கு பெருமை… 🥰❤️
பிறகு தொடர்ந்து முகநூலிலும், நேரிலும் அண்ணன் சீமானுக்கு ஆதரவாக பேசி வருகிறேன்…
பின் 2019ல் எனக்கு எங்கள் தொகுதியின் தகவல் தொழில்நுட்ப செயலாளராக பொறுப்பு கொடுக்கபட்டது.. என்னை நம்பி அந்த பொறுப்பை கொடுத்தவர் அண்ணன் தமிழன்.ரா.ரமேசு ஏற்காடு தொகுதி செயலாளர் அவர்களுக்கு நன்றி..🙏🙏
வெகு விரைவில் எனக்கு தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களும் அறிமுகமும், நெருக்கமும் கிடைத்தது.. பிறகு 2021 தேர்தலில் வேட்பாளர் முகவராக இருந்தேன், என்னால் முடிந்த பணிகளை வெகு சிறப்பாக செய்தேன்…அந்த நேரத்தில் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த திரு #ஜெகதீசபாண்டியன் என்னிடம் நேரடியாக அழைத்து பேசுவார்..
பிறகு என்ன?! அனைத்து கட்சிலும் இருப்பது போலவே, போட்டி பொறாமை அவதூறுகள்…😏
பிறகு நான் கட்சி பணியில் இருந்து விலகவேண்டிய சூழ்நிலை (பொருளாதார நெருக்கடி, திருமணம், குழந்தை ) தொடர்ந்து சூழ்நிலைகள் இப்படி அமைந்தது…கூடவே கழுகு போலவே காத்திருந்த உட்கட்சி நரிகள்..
நான் அரசியலில் செயல்பாட்டில் விலகி இருந்தேன்.. ஆனால் ஒரு நாளும் என் அண்ணன் #சீமானுக்கு எதிராகவோ, நாம் தமிழர் கட்சிக்கு எதிராகவோ நான் பேசியதும் இல்லை, பதிவிட்டதும் இல்லை…
நான் முழுமையான தமிழ்தேசியாவாதியாக இந்த காலகட்டத்தில் என்னை உருவாக்கி கொண்டேன்.. மாறாக கட்சிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் செய்யவில்லை…
இந்த நேரத்தில் என்மீது பலவித அவதூறு தாக்குதல்கள் செய்தார்கள், அப்போது எங்கள் மாவட்டத்தின் மாநில பொறுப்பாளர் திரு ஜெகதீசபாண்டியன் அவரிடம் நான் இது பற்றி சொல்லியும் ஒரு நடவடிக்கைவும் அவர்கள் மீது இல்லை.. காரணம் நான் இறுதியில் சொல்கிறேன்…
இப்படியே காலம் ஓடிவிட அண்ணன் சீமான் இரண்டு மாதங்களுக்கு முன் ஈ வெ ராமசாமி பற்றி பேசுகிறார் அதன் பின் நடந்தது அனைவரும் அறிந்ததே..
ஆனால், திடீரென்று ஒருவர் பெரியார் பற்றி சீமான் பேசியது வலதுசாரி சிந்தனை என்று உருட்டிவிட்டு கட்சி தாவினார்.. உண்மையில் அவர் ஒருவருடம் முன்னரே கட்சியில் ஓரம் கட்டப்பட்டார் என்பது கட்சியில் இருப்பவர்களுக்கு தெரியும்…
இப்போதுதான் சுவாரிசியம்,இவர் கட்சி விட்டு சென்றதும் ஒரு குழு கட்சி விட்டு அதே காரணங்களை சொல்லியும், சில காரணங்களை சேர்த்து கொண்டும் வெளியேறினார்கள்..
அவர்கள் யாரும் இல்லை, 2021ல் என் மீது அவதூறுகளை அள்ளி வீசியவர்கள்.. உண்மையில் அவர்களுக்கு கொள்கையும் இல்லை கோட்பாடும் இல்லை.. எல்லாம் வெற்று பேச்சு…
ஆனால் பல அவதூறுகளையும் அவமானங்களையும் தாங்கிய நான் இன்றும் அண்ணனுடன் இனத்திற்காக நிற்கிறேன்… உண்மையில் இவர்கள் எல்லாம் வெளியேறியதன் மூலம் எங்கள் தொகுதி அண்ணன் சொன்னது போலவே களை எடுக்கட்டு இருக்கிறது.. (அண்ணன் உண்மையில் ஒரு தீர்க்கதரசி தான்)🫰
இது போலத்தான் வெளியேறிய ஒரு ஒருவருக்கும் ஒரு கதை இருக்கும்.. எனவே” இறந்தவர்கள் போக இருப்பவர்கள் சண்டை செய்வோம்” என்று தலைவர் சொன்னது போலவே, “1000துரோகிகள் அண்ணனை சூழ்ந்துக்கொண்டாலும், எங்களை போன்ற 100 தம்பிகள் ” இருந்தாலே போதும் அண்ணனை நாங்கள் வலிமைபடுத்துவோம்..
எனவே எங்கள் வெற்றியை எவராலும், எந்த சூழ்ச்சியாலும் தடுக்க முடியாது.. நாங்கள் உறுதியாக வெல்வோம், அப்போது இந்த திராவிட பன்றிகளை விரட்டி விரட்டி வேட்டையாடுவோம்…
(பின்குறிப்பு :: ரத்தம் கட்சியில் இருந்து எனக்கும் அழைப்பு வந்தது 😂😂😂)
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை…✊✊
வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்… 🙏🙏
புரட்சி எப்போதும் வெல்லும், அதை நாளை மலரும் நாம் தமிழர் அரசு சொல்லும் 😍😍😍
நாம் தமிழர்!
நாம் தமிழர்..!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *