1989 கிளர்ச்சியின் போது நடந்த பல படுகொலைகள் தொடர்பில் சபையில் வெளியான தகவல்கள்

1989 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது இடமபெற்ற படுகொலைகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ரோஹினி குமாரி கவிரட்னவுக்கும் அரச எம்.பி கமகெதர திசாநாயக்கவுக்கும் இடையில் ஏற்பட்ட தர்க்கத்தினால் பல படுகொலைகள் தொடர்பான தகவல்கள் சபையில் வெளிப்பட்டன
பாராளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை ரோஹினி குமாரி கவிரட்ன எம்.பி. முன்வைத்த நிலையிலேயே பல படுகொலைகள் தொடர்பான தகவல்கள் வெளிவந்தன.
ரோஹினி குமாரி கவிரட்ன எம்.பி.மேலும் தெரிவிக்கையில்,
என்னுடன் ஒரே பாடசாலையில் பணியாற்றிய ஒன்றாக சாப்பிட்ட கமகெதர திசாநாயக்க எம்.பி. எனது குடும்பம் தொடர்பில் பொய்களை கூறியுள்ளார். இன்று ஜனநாயகம் தொடர்பில் பேசுபவரின் தந்தை அன்று லக்டனின் விஜயவை வெற்றிபெறச் செய்வோம் என்ற பதாகையை காட்சிப்படுத்திய 8 பேரை கொலை செய்ததாக கூறியுள்ளார். எனது தந்தைக்கு ஆதரவாக பதாகையை காட்சிப்படுத்தியவர்களை எனது தந்தை கொன்றிருந்தால் அவருக்கு மனநோய்தான் இருக்க வேண்டும்.
ஆசிரியராக இருந்தவர் இவ்வாறான பொய்களை கூறுவது தொடர்பில் கவலையடைகின்றேன். கோட்டை சேற்றுப்படையே இதனை செய்கின்றது. நான் மாத்தறையில் இருந்த போது இவ்வாறு கூறுபவர்களே கனங்கமுவேவில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட 8 பேரை கொன்றதாகவும் ஆனால் லக்கலவில் கொலை சம்பவங்கள் நடந்ததாக தெரியாது என்றும் தெரிவித்தனர்.
உங்களுக்கு ஒருவாரம் தருகின்றேன். இதனை பாராளுமன்றத்திற்கு வெளியில் கூறுங்கள். எனது தந்தை 88 இல் இருந்து 94ஆம் ஆண்டு வரையில் பாராளுமன்றத்தில் இருந்துள்ளார். அவரின் காலத்தில் மாத்தளன் என்ற சாரதி இருந்தால் காட்டுங்கள்.
1989 பெப்ரவரியில் கண்டியில் காவலரண்களுக்கு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இன்று மல்வத்து தேரர் திப்பட்டுவாவே சுமங்கல தேரர் இருந்திருந்தால் அவர் சாட்சியாக கூறுவார். இவ்வாறான வரலாற்றை கொண்டவர்கள் இவ்வாறு கதைப்பது தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.எனது தந்தைக்கு இங்கே வந்து பதிலளிக்க முடியாது. எனது அப்பா தொடர்பில் கூறினால் அதற்கு நான்தான் பதிலளிக்க வேண்டும். அதனையே செய்கின்றேன்.
இதேவேளை நளின் ஹேவகே எம்.பி.,நான் பெயரை மாற்றிக்கொண்டதாகவும் கூறுகின்றார். நான் 1994இல் வெளிப்படையாகவே பெயரை மாற்றினேன். இதனை பத்திரிகையில் அறிவித்து செய்ய வேண்டுமென்றில்லை. உங்களுக்கு கட்சியில் பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் தீர்த்துக்கொள்ளுங்கள் என்றார்.
இவ்வேளையில் ஆளும் கட்சி பிரதம கொரடாவான நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகையில்,
பேசுவதற்கு வழங்கிய வாய்ப்பை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று கேட்கின்றேன். அப்போதே உங்களுக்காக கூறியதை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு கூறியுள்ளோம் என்றார்.
இதனை தொடர்ந்து மீண்டும் எழுந்த ரோஹினி குமாரி கவிரட்ன கூறுகையில்,
நான் பெயர் மாற்றம் செய்யவில்லை. உங்களின் ஜனாதிபதியும் பெயரை மாற்றியுள்ளார். அரவிந்த திஸாநாயக்க, அநுர திஸாநாயக்க என்று பெயர் மாற்றிக்கொண்டுள்ளார் என்றார்.
இதற்கு பதிலளித்த கமகெதர திஸாநாயக்க கூறுகையில்,
நான் இங்கே எவரின் பெயரையும் குறிப்பிடவில்லை. அவருக்கு பொருந்துவதாலேயே அவர் இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த காலங்களில் நடந்த கொலைகள் மாத்தறை மாவட்டங்களிலேயே நடந்துள்ளன. 143 பேர் கொலை செய்யப்பட்ட சமூக புதைகுழி உள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும். இவை தொடர்பான தகவல்கள் வெளிவரும் போது யார் கைகா, இழுக்கும்புரவில் கொலைகள் செய்தது. யார் நாவுலவில் வதை முகாமில் கொன்றனர். யார் 142 பேரை மாத்தறையில் கொன்றது என்பதனை தெரிந்துகொள்ள முடியுமாக இருக்கும் இவை பாராளுமன்றத்தில் மட்டுமன்றி வெளியிலும் நாங்கள் தீர்த்துக்கொள்ள முடியும். தலதா மாளிகை முன்னால் மட்டுமல்ல பேராதனை பல்கலைக்கழகத்திற்கு முன்னால் பொன் அல்விஸ்பொன்டுக்கு முன்னால் இருந்தும் விவாதிக்க தயார் என்றார்.
![]()