இலங்கை

அநுர அரசுக்கு சவால் விடுக்கும் சக்தியாக மீண்டும் எழுச்சி பெறுவோம் – மொட்டு கட்சி பகிரங்கம்

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் சக்தியாக மீண்டும் எழுச்சி பெறுவோம். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மீண்டும் எமது பலத்தை உறுதிப்படுத்துவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற தொகுதி மற்றும் ஆசன அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

தேர்தல் பிரச்சார மேடைகளில் குறிப்பிடும் அனைத்தையும் நடைமுறையில் செயற்படுத்த முடியாது என்பதை ஜனாதிபதியும், ஆளும் தரப்பினரும் தற்போது நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

எதிர்வரும் காலங்களில் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பொய்யுரைக்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான சகல பணிகளையும் முன்னெடுத்துள்ளோம். நாடளாவிய ரீதியில் போட்டியிடுவோம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு சவால்விடுக்கும் பிரதான சக்தியாக மீண்டும் எழுச்சிப் பெறுவோம். கடந்த காலங்களில் எம்மை விட்டுச் சென்றவர்கள் பலர் மீண்டும் எம்முடன் ஒன்றிணைவார்கள். என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *