இலங்கை
தேசிய மக்கள் சக்தி அரசின் வரவு – செலவு திட்டம் ஜனாதிபதியினால் சபையில் முன்வைப்பு

தேசிய மக்கள் சக்தி அரசின் வரவு – செலவு திட்டம் ஜனாதிபதி அனுர குமாரவினால் இன்று சபையில் முன்வைக்கப்பட்டது. இதன் போது ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள்
- கடந்த 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர். கடந்த கால ஆட்சியாளர்களின் மோசமான நடவடிக்கைகளினால் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது மட்டுமல்லாது வரிசையில் நின்ற மக்கள் மரணித்த சம்பவங்களும் பதிவாகியிருந்து.
ஆனால் அந்த நிலை தற்பொழுது மாற்றம் பெற்றுள்ளது. - சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும் முயற்சிகளை நாம் முன்னெடுத்துள்ளோம். நாங்கள் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு இன்னும் 3 வருட கால அவகாசம் உள்ளது. அதற்குள் எமது நாட்டை அபிவிருத்தி பாதைக்குக் கொண்டு செல்ல முடியும்.
- எமது அரசாங்கத்தில் ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் .
- இலங்கையின் ஏற்றுமதித் துறையில் மாற்றம் கொண்டு வரப்படும். இதற்காக தேசிய ஏற்றுமதித் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தி இலங்கையின் ஏற்றுமதி அதிகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
- அத்துடன் சந்தை வாய்ப்பினை விரிவு படுத்தி ஏற்றுமதியை முதன்மையாகக் கொண்ட முதலீடுகள் அதிகரிக்கப்படும்.
- எமது அரசாங்கத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அத்துடன் தரமான மற்றும் உரிய விதத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பழைய சுங்கச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, புதிய சுங்கச் சட்டம் நடைமுறைபடுத்தப்படும்.
- புதிய தொழில் முயற்சிகளுக்கு ஊக்குவிப்பு வழங்கப்படும்.
- அரசாங்கத்திற்கு சொந்தமாக காணிகளை பயனுள்ள விதத்தில் பயன்படுத்தி அதன் மூலம் நாட்டிற்கு வருமானத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
- டிஜிட்டல் பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட பொதுச் சொத்துக்களை பயனுள்ள விதத்தில் பொதுமக்களின் நலத் திட்டங்களுக்காகப் பயன்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படமாட்டாது.
![]()