இலங்கை

அரசின் நெருக்கடிக்கு நாங்களே காரணம்

எங்கள் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளே அரசாங்கம் நெருக்கடிக்குள் தள்ளப்பட காரணம் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அன்று எங்கள் மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகளாலேயே அரசாங்கம் இந்தளவுக்கு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அவர்கள் முன்வைத்த பொய் குற்றச்சாட்டுகளை அவர்களால் நிரூபிக்க முடியாது போயுள்ளது.

அது இப்போது அவர்களுக்கு திரும்பித் தாக்க ஆரம்பித்துள்ளது. அதனால் அரசாங்கம் பொய்களை கூறிய அரசாங்கமாக மாறியுள்ளது. கொள்கைப் பிரகடனத்தில் மாத்திரமன்றி எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்று உறுதியாகி வருகின்றன என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *