இலங்கை

மியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்களின் தற்போதைய நிலை

மியன்மாரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்குற்பட்ட 11 ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்கியுள்ளனர்.

அவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் தாய்லாந்து எல்லையிலிருந்து பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

பின்னர் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இதற்கிடையில், ஏனைய நால்வரும் மின்மாரில் தனித்தனி சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை விரைவில் மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *