உலகம்
பிரான்ஸில் உள்ள மதுபான விடுதியின் மீது கையெறி குண்டு வீச்சு! 12 பேர் காயம்

பிரான்ஸின் கிரனோபல் நகரில் ஏராளமானவா்கள் குழுமியிருந்த மதுபான விடுதியில் மர்ம நபரொருவர் கையெறி குண்டு வீசி நடத்திய தாக்குதலில் 12 போ் காயமடைந்தனா்.
இச்சம்பவத்தின் போது தாக்குதல் நடத்திய நபரிடம் இயந்திரத் துப்பாக்கி இருந்துள்ளதாகவும், ஆனால் அவர் அதனைப் பயன்படுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதலாக இருக்காது எனவும், சட்டவிரேத கும்பல்களுக்கு இடையிலான மோதலாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
![]()