இலங்கை

பாய்ந்தது எங்கள் வீட்டு குரங்குதான்

எங்கள் வீட்டில் இருந்த குரங்கு வீட்டில் இல்லை. அந்த குரங்கு பாய்ந்துதான் மின் தடை ஏற்பட்டுள்ளது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில்  ஊடகவியலாளர்களை சந்தித்த போது ஞாயிற்றுக்கிழமை நாட்டில் ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் கூறுகையில்,

எங்கள் வீட்டில் குரங்கொன்று இருந்தது. அந்த குரங்கு இப்போது இல்லை. அந்த குரங்கு பாய்ந்துதான் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் எதிர்க்கட்சியை போன்றே செயற்படுகின்றது. அரசாங்கம் என்பதனை மறந்துவிட்டது.

என்ன நடந்தாலும் முன்னைய அரசாங்கத்தின் மீது குறை கூறுவதையே செய்கின்றது. முறையான வேலைத்திட்டங்களை முன்வைப்பதில்லை. அவ்வாறுதான் மின் தடை விடயத்திலும் நடந்துகொள்கின்றது. வெளிநாட்டு முதலீடுகள் வரும் போது அவற்றை திருப்பியனுப்பாமல் அதனை பயன்படுத்தி மின் உற்பத்தியைய அதிகரிக்கவாவது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *