இலங்கை
குமாரபுரம் படுகொலையின் 29 வது ஆண்டு நினைவுதினம்

மூதூர் – குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் குமாரபுரத்தில் நினைவு கூரப்பட்டது.
இதன்போது பிரதான சுடர் ஏற்றப்பட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு உருவப்படங்களுக்கு மலர்தூவி,விளக்கேற்றி மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.இதனை குமாரபுரம் பிரதேச மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இறுதியாக நிகழ்வில் கலந்து கொண்ட சமூக செயற்பாட்டாளர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.
1996.02.11ம் திகதி மாலை இடம்பெற்ற குமாரபுரம் படுகொலை சம்பவத்தில் 26 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் படு காயமடைந்ததும் தெரிந்ததே.



![]()