உலகம்

சீன ஜனாதிபதியை சந்தித்த பாகிஸ்தான் ஜனாதிபதி

சீனாவின் ஹார்பின் நகரில் நடந்து வரும் 9-வது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வருமாறு தனது நட்பு நாடுகளின் தலைவர்கள் பலருக்கும் சீனா அழைப்பு விடுத்துள்ளது.

அவர்களில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியும் ஒருவர்.

அதன்படி சீனா விடுத்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி 5 நாள் பயணமாக  சீனா சென்றார்.

அங்கு அவர் தலைநகர் பீஜிங்கில் சீன ஜனாதிபதி ஜின்பிங்கை சந்தித்து கலந்துரையாடினார்.

இருநாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *