உலகம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான நிர்வாக உத்தரவில் நேற்று கையெழுத்திட்டுள்ளதுடன், பாலஸ்தீனியர்களுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண அமைப்பு நிதியையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அத்தோடு, ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செய்லபாடுகள் குறித்த மறுஆய்வுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்

ஐக்கிய நாடுகள் அமைப்புகளுக்குள் “அமெரிக்க எதிர்ப்பு” இருப்பதாக கருதப்படுவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருவதுடன், முன்னதாக ஜெனீவா காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

பாலஸ்தீனியர்களுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண அமைப்பு ஹமாஸ் அமைப்பினருக்கு அடைக்கலம் வழங்குகிறது என நேதன்யாகு ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால் பாலஸ்தீனியர்களுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண அமைப்பு அதனை திட்டவட்டமாக மறுத்ததைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில் அமெரிக்கா பாலஸ்தீனியர்களுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண அமைப்பு நிதியை தாற்காலிகமாக நிறுத்திய நிலையில் தற்போது டொனால்ட் ட்ரம்ப அந்த தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

13 மாதகால போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 62 ஆயிரம் பேர் உயிரிழந்த காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளுக்குள் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை நோக்கி மீண்டும் திரும்பி வருகின்றனர்.

இலட்சக்கணக்கானோருக்கு மருத்துவ உதவிகளும் மனிதாபினான உதவிகளும் தேவைப்படும் சூழலில் பாலஸ்தீனியர்களுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண அமைப்பு நிதியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.

இதேவேளை, பால்ஸ்தீன நகரமான காசாவை அமெரிக்கா கைப்பற்றும் என கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *