இலங்கை
மட்டக்களப்புக்கு வெகு விரைவில் செல்கிறார் அநுர

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெகு விரைவில் ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார் அதனால் பெரு நன்மைகள் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெறவுள்ளன என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுதாவளையில் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு 7 வருடங்களாக மக்கள் பாவனைக்குத் திறந்து விடாமல் காணப்பட்ட விசேடபொருளாதார மத்திய நிலையம் கிளீன் ஸ்ரீ லங்கா வேலத்திட்டத்தின் கீழ் சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெகு விரைவில் ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என அவர் தெரிவித்தார்.
![]()