முகநூல்

திரு. அனுரா V.V.T ல் ஆற்றிய உரை பற்றிய என் சிறு பார்வை! … சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா.

 எமது சனாதிபதி திரு.அனுரா‘ திரு. மகிந்தா அரசால் இடித்து அழிக்கப்பட்ட திரு. பிரபாகரன் வீட்டினரு கிலுள்ள உதய சூரியன் விளையாட்டு மைதானத்தில் மக்களை சந்திக்க ஏன் முடிவு செய்தார் என நோக்கில்- அவற்றுள் பெரும் அரசியல் இராஜதந்திரமே அடங்கியுள்ளது எனலாம்.
1986 ல் வடமராட்சி Liberation Opperation ல் இலங்கை இராணுவ வெற்றியின் பின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் திரு. அத்துலத்முதலி வல்வை சந்தியிலிருந்து LTTE மாத்தையாவின் வீடு அமைந்துள்ள நெடிக்காட்டுப் பிள்ளையார் கோவில் வரை நடந்து வந்ததை நினைவூட்டியது.

சனாதிபதி தன்னுரையில் பல சிறந்த விடயங்களை தொட்டு+உணர்வு பூர்வமாகவும்+எளிமை பூத்த அவரது Body Lanquage ம் பொதுமக்களை ஈர்த்து கைதட்டலையும் தனதாக்கினார்.
இவ்வளவு காலமும் மாமா+ மருமகன்//அம்மா+மகள்//அப்பா+மகன்//அண்ணன்+தம்பி+மகன் என உயர்தட்டு வர்க்கம் மக்களை அணுகாது பிரித்தாளும் அரசியலே இலங்கையில் நடைபெற்றன. மேலும் மக்கள் ஒடுக்கப்பட்டன ர்+தூர வைக்கப்பட்டனர். போரும் மூண்டது என்றார். தமிழர்களை கொல்ல JVP முக்கியமாக திரு.அனுரா இராணுவத்துக்கு சிங்கள இளைஞர்களை சேர்த்துக்கொடுத்தார் என்ற செய்தியுமுண்டு.

எமது அரசு மட்டுமே இனபேதமற்ற மக்கள் அரசு. அத்தோடு! பொதுமக்களை நோக்கி இன்னும் நாம் பிரிய வேண்டுமா.? என்ற ஒரு சிறந்த தூர நோக்கு காய் நகர்த்தல் கேள்வியையும் கேட்டார்.அதற்குள் நீங்கள் இனி உரிமை பற்றி பேச முடியாது என்பதை பூடகமாக வெளிப்படுத்தி தான் தப்பித்துக் கொண்டார்.

அதைவிட வேடிக்கை என்னவென்றால்‘ தமிழ் போராட்டக்குழுக்களால் ஏற்ப்பட்ட வட கிழக்கு இணைப்பை இவரேதான் முன்னின்று வழக்கு தாக்கல் செய்து பிரித்தவர் எனும் குற்றச்சாட்டுமுண்டு.

முந்தைய ஓர் அரசு மக்கள் வரிப்பணத்தை திருடினார்கள்+ கொள்ளையடித்தார்கள் என்பதை அடிக்கடி கூறினார்.தொடர்ந்து வரும் செய்திகளை பார்க்கும்போது! அக்குற்றச்சாட்டுக்களை சாதாரண பொதுமகன் தட்டிக்கழித்து கடந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.”ஊசியில் களவு +தரக்குறைவான மருந்து இறக்குமதி+ வைத்தியசாலைக்களவு+ எரிபொருட் களவு+ மத்திய வாங்கிக் கொள்ளை+ ஒஸ்றேலியாவில் வெள்ளைக்குடிமகனை ஏமாற்றியது+வீதி அமைப்பதில் களவு”என பட்டியலிட்டத்தோடு! யாழில் போதை வஸ்த்தை கட்டுப்படுத்தவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.

இக்குற்றச்சாட்டு 100% உண்மையே! தாம் அதை கட்டுக்குள் கொண்டு வருவோமென்றார். மேலும் இப்படி நாட்டை கொள்ளையடித்தவர்களுக்கு கட்டாயம் தண்டனை கொடுப்போம் என்றதும்‘ பொதுமக்கள் கைதட்டி குதூகலித்தனர்.

இத்தண்டனை-கொள்ளை அரசியல் வாதிகள் மீது எவ்வளவு வீதம் சாத்தியமாகும் என்ற கேள்வி எனக்குண்டு. ஏனெனில் பல ஆதார கோப்புக்களை அவர்களே அழித்திருப் பார்கள்.
மேலும் முந்தைய அரசு எந்த ஒரு கைத்தொழிலும் உருவாக்கவில்லை+ கடற்தொழில் செய்ய முடியவில்லை+நல்ல றோட்டில்லை என்கிறார். ஆனால் திரு.பசில் பல முக்கியமான வீதிகளை சிறப்பாக அமைத்தார். அனால்‘ அதில் பெரும்……??? நடந்ததாக பலமான குற்றச்சட்டு உண்டு.

KKS+நுவரெலியா+அனுராதபுரம்+மஹியங்கனை+கதிர்காமம் போன்ற இடங்களிலுள்ள சனாதிபதி மாளிகைகள் தேவையா என மக்களைக்கேட்டு திரு.மகிந்தாவை மறைமுகமாக கிண்டலடித்ததோடு! எனக்கு வேண்டாம் எனவும்,மக்கள் வறுமையில் வாட; இவர்கள் கமலஹாசனின் தசாவதாரம் போன்று அந்த மாளிகைகளில் வாழ்த்தார்கள் என்றததோடு! அவற்றை Univercity or கலாச்சார மண்டபமாக மாற்றலாம் என்ற சிறப்பான கருத்தையும் முன் மொழிந்தார்.

KKS ல் அமைந்துள்ள திரு. மகிந்தாவின் நான்கு சனாதிபதி மாளிகை களையும் நான் பார்த்தேன்.அதற்குள் இருவழிப்பாதைகள் பெரும் செலவில் சிறப்பாக அமைக்கப் பட்டுள்ளன.அவற்றை NPP அரசு சிறிய ஆஸ்பத்திரியாக or பல்கலைக்கழகமாக மாற்றினால் தமிழருக்கு நன்மை பயக்கும்.

ஒவ்வொரு பிள்ளையும் கற்கணும்+நல்ல சீருடை+வறுமையை ஒழிக்கணும்+ போதிய ஆசிரியர் நியமனம்+2000 தமிழ் போலீசார் நியமனம் (இக்கூற்று GG பொன்னம்பலம் கேட்ட 50:50 ஐ நினைவூட்டியது) என்பதில் கவனம் செலுத்துவோம் என்றார்.

போரின் பின் இதுவரை 16 வருடங்கள் எம்மையாண்ட இனவாத அரசுகள், அதன் மந்திரிகள் சிறிதேனும் சிந்திக்காத KKS+பரந்தன்+மாங்குளம் ஆகியவற்றில் தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்ற செய்தியும் சொல்லப்பட்டது. ஆனால்` என் சிந்தனைப்படி-மாங்குளத்தைத்தவிர KKS+பரந்தன் இரு தொழிற்சாலைகளும் அரசு மீளமைப்பது கடினம். அவற்றை யப்பான்,இந்தியாவிடம் ஒப்படைக்கலாம். யப்பானிலிருந்து தரமான சீமெந்தை இலங்கை இறக்குமதி செய்கிறது.

பருத்தித்துறை+KKS துறைமுகத்தை நவீனமுறைமையில் கட்டினால் சிறப்பு. அவற்றைப்பற்றி எதுவும் சனாதிபதி கூறவில்லை.அத்தோடு` எமது திக்கம் பனம் சாராய வடிசாலையை விரைவில் இயங்க வைக்க முயலணும் இதனால் பல ஏழைச்சீவல் தொழிலாளர்கள் நன்மையடைவர்.

முக்கியமாக 78 வருடங்களாக புரையோடிப்போயுள்ள எமது ஞாயப்பாடான உரிமையை பற்றி வாய்திறக்காது சகல இனத்தவரும் ஒற்றுமையாக வாழ்வோம் என்ற “ஒற்றைப்பதத்தினுள்” அனுரா எமது உரிமைக்கோரிக்கையை புதைத்து ஏனைய சிங்களத்தலைவர் போன்றே தானும் என்பதை ஐயமின்றி நிரூபித்துள்ளார்.

இவரது ஆட்சிக் காலத்தில் எமக்கு கிடைக்க வேண்டியதை நாம் பெறாது விடின்; இவரது ஆட்சி தொடர்ந்து நீடிக்கப் போவதில்லை. மீண்டும் நாட்டை கொள்ளையடித்த இனவாதிகள்+கடும்போக்காளர்கள் கையில் ஆட்சி கை மாறும். அவர்கள் வந்தால்` மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதைதான் தொடரும்.

எல்லாம் அஷ்கிரிய+ மல்வத்தை பீடங்களிலும் அனுரா கைகளிலும், தமிழர்களின் ஒற்றுமையிலுமே தங்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *