ரணில் – சஜித் இணைவு; தலைமை மற்றும் சின்னம் குறித்து வெளியான தகவல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுப் பட்டியலைத் தயாரிக்கும் மட்டத்துக்கு இரு கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதே பிரதான நோக்கமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

ஜக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளின் இணைப்பு தொடர்பான விவாதங்கள் வெற்றிகரமான நிலையை எட்டியுள்ளதாகவும், தலைமை மற்றும் சின்னம் குறித்து இதுவரை விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

தலைமை மற்றும் சின்னம் தொடர்பான சிக்கல்கள் பின்னர் சரிபார்த்துக்கொள்ள முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றுமொரு பிரிவினருடன் இது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்.

இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கட்சியினர் உள்ளனர்.

எதிர்காலத்தில் பிரச்சினைகள் எவ்வாறு எழுகின்றன என்பதைப் பொறுத்து அதைப் பற்றி பேசுவோம்.

தலைமைத்துவம் பற்றி பேசுமளவுக்கு நாங்கள் வரவில்லை. இருந்தபோதிலும் பேச்சுவார்த்தைக்கு இரு கட்சிகளின் தலைவர்களின் முழு ஆசிர்வாதம் கிடைத்துள்ளது.

முதலில் ஒரு உடன்படிக்கைக்கு வருவதே எங்கள் நோக்கம். அதன் பிறகு மற்ற பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாகும். அதற்கு முன் ஒரு உடன்பாட்டை எட்டுவதுதான் எங்களின் இலக்கு.

இந்த ஒப்பந்தத்தில் மற்ற கட்சிகள் எங்களுடன் இணைந்துகொள்ளலாம். என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *