இந்தியா

தந்தை பெரியார் குறித்து சர்ச்சைப் பேச்சு!; சீமான் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசிய குற்றச் சாட்டில் நாம் தழிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக தந்தை பெரியார் குறித்து சீமான் தொடர்ச்சியாக சர்ச்சைக்குறிய கருத்துக்களை பொதுவெளியில் வெளியிட்டு வருகின்றார். இதனால்,தந்தை பெரியாரின் ஆதரவாளர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை சீமான் மீது கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் சீமானுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் வழக்குகளும் தொடரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசிய புகாரில்,சீமான் மீது சேலம் சூரமங்கலம் பொலிஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பு சார்பில் குறித்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *