இந்தியா

திரிவேணியில் இதுவரை 13 கோடி பேர் புனிதநீராடல்

மகா கும்பமேளாவிற்கு இதுவரை சுமார் 13 கோடி பேர் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13ஆம் திகதி தொடங்கியது. பெப்ரவரி 26ஆம் திகதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவுள்ளது.

இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

இந்நிலையில், இதுவரை சுமார் 13 கோடி பேர் கும்பமேளாவுக்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.  (27) காலை 8 மணி நிலவரப்படி ஒரே நாளில் அதிகபட்சமாக 46 இலட்சம் பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *