முகநூல்
சிக்கித் தவிக்கும் மஹிந்த …. ஒரு புறம் வீட்டு பிரச்சனை, மறுபுறம் மகனின் கைது பிரச்சனை!

மஹிந்த குடும்பம் கடந்த ஆட்சி காலத்தில் செய்த ஊழல்கள், மோசடிகள், கொலைகள் போன்றவற்றுக்கு இதுவரை காலமும் எந்த பிரச்சனையும் ஏற்படாது என நினைத்து வந்தார். மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு, இப்போது சிக்கல்கள் தோன்றி இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. மஹிந்தவோடு இருந்தவர்கள் பெரும்பாலும் அமைதியாகி விட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே ஏதோ பேசுகிறார்கள். முன்னர் இப்படி ஒரு நிலை என்றால், மஹிந்தவின் வீட்டை சுற்றி மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடி இருக்கும். இப்போது அவரோடு இருக்கும் ஒரு சிலர் மட்டும் அறிக்கைகளை விட்ட வண்ணம் உள்ளனர். அதுவும் பெரிதாக இல்லை.
மகிந்தவை விட, அனைவருக்கும் மஹிந்தவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, நாமல் ராஜபக்சே, ரோகித ராஜபக்ஷ ஆகியோர் மேலே கோபம் இருக்கிறது. இந்த கோபம் வெளிப்பகுதி ஆட்களை விட, அவர்களோடு நெருக்கமாக இருந்த ஆட்கள் மூலமே வெளிப்படுகிறது. அந்த அளவு மோசமாக இவர்கள் செயல் பட்டு இருக்கிறார்கள் என தெரிகிறது.
அணுர அரசால் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க பலரை மகிந்த அணுகுகிறார். ஆனால் அவர்களால், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வை நெருங்கவே முடியாமல் போய் உள்ளது. அடுத்து கடைசியாக அனுரவோடு நெருக்கமாக இருக்கும் மகாநாயக்க தேரர்களை அணுகி இருக்கிறார். ஆனால் அவர்களோ மௌனம் காத்து நிற்கிறார்கள். இதனால் மகிந்த ராஜபக்ஷ பெரும் சங்கடத்தில் இருக்கிறார். இப்போது யோசித்த கைதாகி, விளக்கமறியலில் இருக்கிறார்
.
.
இதே நேரம் மகிந்த ராஜபக்ஷ , தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என புலிகளது எழுச்சியை காட்டுவதற்காக, நீதிமன்றத்திற்கு அனுப்பிய காரணங்களில் டாக்டர் அர்ச்சுனாவின் பேச்சுக்களை மகிந்த குறிப்பிட்டு, அது சம்பந்தமான வீடியோக்கள், செய்திகள் மற்றும் தொலைபேசி உரையாடல்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்திருக்கிறார். இது இப்போது உள்ள நிலை, அடுத்து என்ன நடக்கும் என பின்னர் சொல்கிறேன்.
![]()