இந்தியா

இந்தியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட 23 கோடி கஞ்சா பறிமுதல்

இந்தியாவின் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சுங்க இலாகாவின் விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது பாங்காக்கில் இருந்து வந்த தாய்லாந்தை சேர்ந்த 3 பேரின் உடமைகளை சோதனை செய்தனர். அதில் ஹைட்ரோ போனிக் கஞ்சா 23 கிலோ மற்றும் பல்வேறு போதை பொருட்கள் கடத்தி வருவது தெரியவந்தது. இந்த வகை கஞ்சா சர்வதேச மதிப்பில் 1 கிலோ ரூ.1கோடிக்கு விற்பனையாகிறது.

பெங்களூருவில் பிடிபட்ட 23 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூபா 23 கோடி ஆகும். இதையடுத்து பிடிபட்ட 3 பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின் சிறையில்அடைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *