பாம்பு கடித்தவரை தொட்டில் கட்டி தூக்கிச் சென்ற கிராம மக்கள்

தமிழகத்தின் ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்தில் குளிப்பட்டி, குருமலை, மாவடப்பு உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன.
இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீதி வசதி கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குருமலை கிராமத்தைச் சார்ந்த சரவணன் (30) என்பவர் திருமூர்த்தி நகரில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வீடு திரும்பினார். மலைப்பகுதி வழியாக சென்றபோது எதிர்பாராதவிதமாக அவரை பாம்பு கடித்தது.
உடனடியாக, மலை கிராம மக்கள் அவரை மருத்துவமனைக்கு தொட்டில் கட்டி உடுமலை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். வீதி வசதி இல்லாததால் மலை கிராமத்துக்கு அவசர மருத்துவ தேவைகளுக்கு எந்த வாகனங்களும் செல்ல முடியாததால் தொடர்ந்து தொட்டில் கட்டி தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இவ்வாறான நிலைமை ஏற்படும் போது பல்வேறு சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, உடனடியாக போர்க்கால அடிப்படையில் வீதிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
![]()