இந்தியா
பொங்கல் விழாவில் சாகசம் – மாணவர்களின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் சுப்பையாபுரத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியல் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பொங்கல் விழாவிற்காக கல்லூரிக்கு வந்திருந்த மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
இதையடுத்து மாணவர்கள் தங்களது விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் கல்லூரி வாசல் முன்பு சாகசத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வீதியில் சென்ற வாகன சாரதிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. அந்த இடம் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து பொலிஸார், மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இதன்படி சுமார் 14 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 1 இலட்சத்து 41 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
![]()