இந்தியா

கேப்டன் விஜயகாந்தின் ஓராண்டு நினைவு – இன்று 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து உள்ளனர்.

இதன்படி முதலாம் ஆண்டு குரு பூஜை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெறுகிறது.

இந்த குரு பூஜையில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தே.மு.தி.க. துணை செயலாளர்களான எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி மற்றும் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் நேரில் சென்று இதற்கான அழைப்பிதழ்களை வழங்கி உள்ளனர்.

இதனை ஏற்று நாளை அரசியல் கட்சி தலைவர்கள் விஜயகாந்த் நினைவு இடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிரேமலதா தலைமையில் இன்று காலை 8.30 மணி அளவில் கோயம்பேடு மேம்பாலத்தை ஒட்டியுள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் அருகில் இருந்து அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான தே.மு.தி.க. நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

தே.மு.தி.க. அலுவலகத்தை ஊர்வலம் வந்தடைந்ததும் அங்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யவுள்ளனர்.

விஜயகாந்த் கேப்டன் நினைவாலயத்துக்கு வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. 25 ஆயிரம் பேர் சாப்பிடும் அளவுக்கு நாளை அன்னதானம் நடைபெறுகிறது.

பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உள்ளே வருவதற்கு தனி வழியும் வெளியே செல்வதற்கு தனி வழியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. முக்கிய பிரமுகர்கள் வந்து செல்வதற்கும் தனி வழி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. நாளை நடைபெற உள்ள கேப்டனின் முதலாம் ஆண்டு குரு பூஜையில் தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்று மரியாதை செலுத்த இருப்பதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளதாக தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.

நாளை நடைபெற உள்ள விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குரு பூஜையையொட்டி அவரது நினைவிடத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் விழாவில் கலந்து கொள்ள தவெக தலைவர் விஜய்க்கு தேமுதிக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேரில் சென்று தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *