“ஒப்பற்ற ஆளுமை அம்மா…”; எடப்பாடி பழனிச்சாமி புகழஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாள்.
இதனையொட்டி அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவரது எக்ஸ் தளத்தில்,
“மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு ஈடு இணையில்லா நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற ஆளுமை, இந்த இயக்கத்தை பல்வேறு சோதனைகளையும் தாண்டி மக்களுக்கான பாதையில் தொடர்ந்தும் பயணம் செய்ய உயிராய், உணர்வாய், உந்து சக்தியாய் திகழும் புரட்சித் தலைவி அம்மா அவர்களை அவரது நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன்.
அம்மா காண்பித்த வழியில் மக்களின் குரலாய் என்றும் ஒலிப்போம். தீய சக்திகளின் ஆட்சியை துரத்தியடித்து அம்மா ஆட்சியை மீண்டும் அமைத்து அனைவருக்கும் அமைதி, வளம், வளர்ச்சி பொருந்திய தமிழ்நாட்டைக் கட்டமைப்பபதே அம்மாவுக்கு செலுத்தும் புகழஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
![]()