இந்தியா

இன்று (நவ. 26) மும்பை தாக்குதல் நினைவு தினம்

கடந்த 2008 நவ., 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த 10 பயங்கரவாதிகள் தனித்தனி குழுவாக இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் ஊடுருவி சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், லியோபோல்டு கபே ஆகிய இடங்களில் கண்ணில் பட்ட அப்பாவி மக்களை சுட்டுக்கொன்று தங்களது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினர்.

இந்த தாக்குதலில் உள்பட 166 பேர் பலியாகினர். இதன் 16-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கைதான கசாப் 2012ல் துாக்கிலிடப்பட்டார்.

பயங்கரவாதிகளுக்கும், இந்திய பாதுகாப்பு படையினருக்கும் இடையே 2 நாட்கள் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் பலரை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்ததால், அவர்களை உயிருடன் மீட்க நமது வீரர்கள் போராட வேண்டியிருந்தது. இதில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஹேமந்த் கர்கரே, ராணுவ உயர் அதிகாரி சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் அசோக் காம்தே ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். முடிவில் 10 பயங்கரவாதிகளில் ஒருவனை தவிர, 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *