இந்தியா

இந்தியாவில் ரயில் கவிழ்ப்பு சதி; தண்டவாளத்தில் சீமெந்து பலகை மற்றும் இரும்பு கம்பி

இந்தியாவில் ரயில்களை கவிழ்க்கும் சதி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை சரக்கு ரயில் ஒன்று சென்றுள்ளது.

அப்போது அங்குள்ள தண்டவாளத்தில் சீமெந்து பலகை மற்றும் இரும்பு கம்பி வைக்கப்பட்டிருந்ததை கண்ட ரயில் சாரதி, அவசரகால தடுப்பின் மூலம் ரயிலை உடனடியாக நிறுத்தியுள்ளார்.

இதனால் எதுவித விபத்தும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த சீமெந்து மற்றும் இரும்பு கம்பியை அகற்றியுள்ளனர்.

பின்னர் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

இவ்வாறு ரயில்களை கவிழ்ப்பதற்கான சதி வேலைகளை செய்பவர்கள் யார் என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *