தேர்தல் களம்

செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பொகவந்தலாவை பிரதேச பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் பலவற்றின் பிராந்திய நிருபராகப் பணிபுரியும் பொகவந்தலாவை எஸ்.சதீஸ்குமார் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளாகி பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவை கெக்கர்ஸ்வோல்ட் இலக்கம் 2 தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் இன்றைய தினம் பிற்பகல் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும், குறித்த நபர் ஒருவர் தனக்குப் பின்னால் வந்து அருகில் கடையொன்றில் இருந்து கத்தியை எடுத்து தனது தலையில் தாக்கியதாக சதீஸ்குமார் தெரிவித்தார். மேலும், சம்மந்தப்பட்ட சந்தேக நபர் மதுபோதையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் ஊடகவியலாளர் சதீஸ்குமார் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *