”தி.மு.க மக்களுக்கு நன்மை செய்வதைப் போல் ஒரு பிம்பத்தை தான் காட்டுகிறது”

அ.தி.மு.கவின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளரும் ஜெயலலிதாவின் தோழியுமாக இருந்த சசிகலா, திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று புதன்கிழமை சென்னையிலிருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், திமுக கட்சியைப் பற்றி கடுமையாகச் சாடியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
”தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையில் எதுவித மாற்றமும் இல்லை. எப்போதும் போல்தான் உள்ளது. புதிதாக கட்சி தொடங்கியவர்கள் குறித்து 2026 ஆம் ஆண்டு தான் தெரியும்.
தி.மு.க அரசு அமைந்து 4 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், மக்களுக்கு செய்ய வேண்டிய எதையுமே செய்யவில்லை.
தமிழகத்தில் கொலைகள் அதிகமாகிவிட்டன. மாலை ஐந்து மணிக்கு மேல் பெண்களால் வெளியில் செல்ல முடியாமல் உள்ளது. ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. மக்கள் பெரும் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இது குறித்து தற்போது வரையில் தி.மு.க அரசுக்கு தெரியவில்லை.
தி.மு.க கட்சி மக்களுக்கு நன்மை செய்வதைப் போல் ஒரு பிம்பத்தை தான் காட்டுகிறது. மக்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டு தான் இருக்கின்றனர். இது 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எதிரொலிக்கும்” எனக் கூறியுள்ளார்.
![]()