தேர்தல் களம்

முல்லைத்தீவில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தீவிரம்!

பொதுத் தேர்தலை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் 137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இப்பொதுத் தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் இருந்து 6 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 23 கட்சிகளும், 25 சுயேட்சை குழுக்களுமாக மொத்தமாக 432 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை இத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தேர்தலில் 1653 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 500 பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *