இந்தியா

இந்தியா மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

இந்தியாவின் மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் திங்களன்று (11) மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் (CRPF) நடத்திய என்கவுன்டரில் குறைந்தது 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

CRPF முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்த பரஸ்பர துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது ​​CRPF ஜவான் காயம் அடைந்து, விமானம் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தாக்குதலின் போது, மத்திய ரிசர்வ் பொலிஸ் படையினர் தீவிரவாதிகள் பயன்படுத்திய பெருமளவிலான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

ஆயுதமேந்திய தீவிரவாதிகள் ஜகுராதோரில் உள்ள மெய்தே சமூகத்தைச் சேர்ந்த மூன்று-நான்கு கைவிடப்பட்ட வீடுகளுக்கும் தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *