இந்தியா

ஷாருக்கானுக்கு எதிரான கொலை மிரட்டல்; வழக்கறிஞர் ஒருவர் கைது!

போலிவூட் நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் சத்தீஸ்கர் மாநில வழக்கறிஞர் ஒருவர் மும்பை பொலிஸாரால் செவ்வாயன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இருந்து பைசான் கான் என்ற குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக மும்பை பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.

இவர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவரிடம் 50 இலட்சம் இந்திய ரூபா கப்பமாக கோரியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த வாரம் பாந்த்ரா பொலிஸ் நிலையத்திற்கு ஷாருக்கானுக்கு எதிரான கொலை அச்சுறுத்தல் செய்தி வந்ததைத் தொடர்ந்து மும்பை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *