இந்தியா

இந்தியாவில் சிறுவர்கள் உட்பட கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட ஐவர்

இந்தியாவில் சென்னை வளசரவாக்கம் திருப்பதி நகரில் ரஷிதா என்பவர் வீட்டில் சிறுவர்கள் உட்பட 5 பேர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வந்துள்ளனர்.

மேலும் ரஷிதா அவர்களை அடித்து சித்திரவதை செய்து வருவதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் குறித்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 13 வயது சிறுவன், 20 வயதான இரண்டு பெண்கள், 17 வயது சிறுமி, 34 வயது பெண் ஆகியோர் முறையே ஒன்றரை இலட்சம் மற்றும் மூன்று இலட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டு சுமார் 6 வருடங்களாக கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஐவரிடமும் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டின் ஒட்டுமொத்த பணிகளையும் அவர்களே செய்ததுடன் பல சித்திரவதைகளையும் அனுபவித்ததாக தெரிய வந்துள்ளது.

மீட்கப்பட்ட ஐவரும் வெவ்வேறு காப்பங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ரஷிதாவை கைது செய்த பொலிஸார் அவர் மீது குழந்தை தொழிலாளர் ஒழிப்புச் சட்டம், குழந்தைகளை கொடுமைப்படுத்துதல், கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *