இந்தியா

இந்தியாவில் தொலைபேசி வெடித்து இளைஞர் உயிரிழப்பு!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் சூடான எண்ணெயில் தொலைபேசி தவறி விழுந்து பேட்டரி வெடித்து சிதறியதில் சந்திர பிரகாஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சமைத்துக் கொண்டே தொலைபேசி பயன்படுத்திய போது இந்த விபத்து நடந்துள்ளது.

தொலைபேசியின் பேட்டரி வெடித்ததில் படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போதே உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததே உயிரிழப்புக்கு காரணம் என்று உயிரிழந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

உயிரிழந்த சந்திர பிரகாஷ் இற்கு திருமணமாகி 14 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *