இந்தியா

தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் 304 பேர் பட்டாசு விபத்தால் காயம்

தீபாவளி பண்டிகை கடந்த வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. தீபாவளிப் பண்டிகை என்று வந்துவிட்டாலே பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது வழக்கம்.

பட்டாசுகளினால் பல பாதிப்புகள் ஏற்படுவதனால், பொதுமக்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் பட்டாசுகளினால் பல பாதிப்புகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதிலும் கடந்த வியாழக்கிழமை வெடிக்கப்பட்ட பட்டாசு விபத்துகளால் 304 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

பட்டாசு வெடிப்புகள் மட்டுமல்லாமல் பிற காரணங்களாலும் 31 இடங்களில் தீ விபத்துக்கள் பதிவாகியுள்ளன என்றும் கடந்த வியாழக்கிழமை இரவு பட்டாசு விபத்து தொடர்பில் சுமார் 97 முறைப்பாட்டு அழைப்புகள் வந்ததாகவும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *