இந்தியா

சென்னையில் மீண்டும் உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை!

இந்தியாவின் சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை சற்று அதிகரித்துள்ள நிலையில், புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் திகதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன.

அதன்படி, இந்த மாதத்திற்கான மாற்றம் செய்யப்பட்ட விலை பட்டியில் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,855 ரூபா ஆக இருந்த நிலையில், இன்று முதல் 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் 1,964.50 ரூபாய்க்கு விற்கப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

அதேபோல டெல்லியில் 1,802 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 1,911.50 ரூபாயாகவும், மும்பையில் 1,754.50 ரூபாயாகவும் வணிக சிலிண்டருக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரம் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50 என்ற அளவிலேயே தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *