இந்தியா

விஜய்யின் மாநாடு குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் த.வெ.க கட்சித் தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு போயர்ஸ் கார்டனில் அவரது இல்லத்துக்கு முன்பு பல ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

அவர்களுக்கு ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து கூறியதையடுத்து, விஜய்யின் மாநாடு குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “நிச்சயமாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழக மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *