இந்தியா

தி.மு.கவிடம் தமிழக மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்

தமிழக மக்கள் தி.மு.கவின் ஆட்சியில் மாட்டிக்கொண்டு தவிப்பதாக அதிமுகவின் முன்னாள் இடைக்கால பொதுச் செயலாளரும் ஜெயலலிதாவின் தோழியுமாக இருந்த சசிகலா தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 ஆவது ஜனன தினம் மற்றும் 62 ஆவது குரு பூஜையை முன்னிட்டு, சென்னையிலிருந்து மதுரை வந்தபோது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோதே இதனை தெரிவித்துள்ளார்.
தி.மு.கவின் ஆட்சி வந்ததிலிருந்து எங்கும் தூர்வாரவில்லை எனவும் இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் தமிழக மக்கள் தி.மு.கவின் ஆட்சியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு அம்மாவின் ஆட்சி வந்தால் இந்நிலை மாறி விடிவு பிறக்கும் எனவும் கூறியுள்ளார்.
அதேவேளை நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தமை குறித்து செய்தியாளர்கள் வினவுகையில்,
யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால், மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களே முதலமைச்சர் எனத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *