முச்சந்தி

நாடாளுமன்றத் தேர்தல்-அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அத்துடன் மனு தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின், அவற்றை இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதேவேளை சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் “நாம் இலங்கை தேசிய அமைப்பின்” அழைப்பாளருமான எச்.எம். பிரியந்த ஹேரத் அவர்களினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button