பிரிக்ஸ் மாநாடு – மோடி ரஷ்யாவுக்கு விஜயம்

பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு `பிரிக்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷியாவின் தலைமையில் நடைபெற உள்ளது. ரஷியாவில் உள்ள காசான் பகுதியில் இன்றும் நாளையும் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.

இந்த மநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றுள்ளார். முன்னதாக பிரதமர் மோடி தனது ரஷிய பயணம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் , புட்டின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் பயணமாக ரஷ்யாவுக்கு சென்று 16-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், உருவான பிரிக்ஸ் அமைப்பிற்குள் உள்ள நெருக்கமான ஒத்துழைப்பை இந்தியா மதிக்கிறது.எனது கசான் பயணம் இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும். பிரிக்ஸ் அமைப்பின் மற்ற தலைவர்களையும் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button