இந்தியா

பீகாரில் கள்ளச்சாராயம் அருந்தி 33 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

பீகார் மாநிலம், சிவான் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கள்ளச்சாராயம் குடித்த சிலர் திடீரென மயங்கி விழுந்தமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மொத்தம் 79 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுள் சிவான் மாவட்டத்தில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் சரண் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் ஐவர் என இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *