இந்தியா

மகாராஷ்டிராவில் பரபரப்பு – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொலை

மகாராஷ்டிரா மாநிலத்தில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக்.

40 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்த பாபா சித்திக், கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது அஜித் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரசில் இணைந்தார். இவர் முன்னாள் அமைச்சர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில், மும்பையில் பாபா சித்திக் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுதொடர்பாக பொலிஸார் தற்போது மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *