இந்தியா

583,410 கிராம் எடையுள்ள ஐந்து தங்கக் கட்டிகள்: சோதனையில் பறிமுதல்

இந்தியா – பங்களாதேஷ் எல்லையினூடாக போதைப்பொருள், தங்கம், வெடி பொருட்கள் போன்றவை கடத்தப்படுவதை தடுப்பதற்காக எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அசாம் மாநிலம் கூச்பிகார் மாவட்டத்தின் எல்லைப் பகுதிக்கருகில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 583,410 கிராம் எடையுள்ள ஐந்து தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன.

இதன் மதிப்பு ரூபாய் 45.03 இலட்சம் ஆகும்.

இத் தங்கக் கட்டிகள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் இவ் விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *