இந்தியா

விஜய்யின் வருகை பெரியார் அரசியலுக்கு மேலும் வலு சேர்க்கும்!; திருமாவளவன்

”விஜய்யின் வருகை பெரியார் அரசியலுக்கு மேலும் வலு சேர்க்கும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” 2026ஆம் ஆண்டு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுவரொட்டி ஒட்டியிருப்பது, ஒரு ஜனநாயகப்பூர்வமான கோரிக்கையாகும். அதிகாரத்தை ஜனநாயகப்படுத்துவது எங்கள் நிலைப்பாடு. தற்போது திமுக கூட்டணியில் இருந்து கொண்டுதான் வலியுறுத்துகிறோம்.

அதே சமயம் பெரியார் அரசியலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், நடிகர் விஜயின் வருகை உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் நிலைப்பாட்டில் எங்களுக்கு சிறிதளவும் உடன்பாடில்லை.

ஏற்கனவே இதனை எதிர்த்து இருக்கிறோம். மீண்டும் ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி எதிர்ப்பு குரலை ஓங்கி ஒலிக்கச்செய்வோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *