கவிதைகள்

விளையாட்டுக் கடிகாரம்… கவிதை… முல்லைஅமுதன்

எனக்காக எதையும் வாங்கியதில்லை.
சிறுவயதில் திருவிழாவில்
உறவினர் வாங்கித்தந்த
விளையாட்டு க் கடிகாரம்…

இப்போது மகள் வாங்கித்தந்த
அப்பிள் கடிகாரம்..
எப்போதும் பரிசுப் பொருட்கள்
உள்ளூர மகிழ்வைத் தருவது தான்..
கைக்கடிகாரத்தை அப்படி இப்படி என
அசைத்துப்பார்த்து நடக்கையில்
யாராவது பார்க்கிறார்களா
மனது மௌனமாய் சரிபார்த்துகொள்ளும்.
முதல் சம்பளத்தில்
வாங்கிக் கொடுத்ததை,
மனைவிக்கு பரிசளித்ததை,
மகள்களுக்கு அன்பைக் கொடுத்ததும்
என்றாலும்
இப்போதும்
கொடுப்பதிலும்,
பெற்றுக்கொள்வதிலும்
பைவ்ய்,பாசம்,காதல்..
உணர்கிறேன்..இந்த வயதிலும்.

முல்லைஅமுதன்
15/09/2024

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *