நல்லூர் ஆலயத்திற்கு சென்று ஆசி பெற்றுக்கொண்ட சஜித்: பல்வேறு தரப்பினருடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடல்

ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிமித்தம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வட மாகாணத்துக்கு விஐயம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள அவர், இன்றைய தினம் சனிக்கிழமை காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காகவும், ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குமாக வேண்டியும் ஆசி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்து பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட அவர், யாழ் நாகதீப ரஜ மகா விகாரைக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button