வரலாற்று சிறப்புமிக்க நல்லுார் கந்தனுக்கு ஒருமுகத்திருவிழா!

ஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லுர் கந்தசுவாமி ஆலயவருடாந்த மகோற்சவத்தின் 22 ஆம் நாள் திருவிழாவான நேற்று மாலை ஒருமுகத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற ஒருமுகத்திருவிழாவில், நல்லூர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக சிவாச்சாரியாரின் கம்பீரமான வருகை அறிவிப்புடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது பிரதம சிவாச்சாரியாரால் நல்லூர் கந்தனின் வாள் முன்வர, ஏனைய சிவாச்சாரியார்கள் முருகனின் வேலினை ஏந்தி வர கலைஞர்களின் பல்வேறு வாத்தியங்கள் முழங்க கீர்த்தனைகள் முழங்க முருகப்பெருமான் வீதியுலா வந்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் ஒன்று திரண்டு ஒருமுகத் திருவிழாவில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்று சனிக்கிழமை, மாலை 4.45 க்கு சப்பரத்திருவிழாவும், நாளை ஞாயிற்றுக்கிழமை கலை 6.15 க்கு தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button