நாமல் ஜனாதிபதியாக பதவியேற்றால் பிரதமர் யார்?: மகிந்த ராஜபக்ச இல்லை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச வெற்றி பெற்றால் குருணாகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிரதமராக நியமிக்க உத்தேசித்துள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்சவின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உள்ளது. அவர் பிரசாரத்தை ஆரம்பித்து ஒரு வாரத்திற்குள் ரணில் விக்கிரமசிங்கவால் உருவாக்கப்பட்டுள்ள விம்பம் உடைத்தெறியப்படும்.

ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு சஜித் பிரேமதாசவுடன் மட்டுமே போட்டி இருப்பதாகவும் உதயங்க வீரதுங்க கூறியுள்ளார்.

நாமல் ராஜபக்ச தமது தேர்தல் பிரசாரத்தை எதிர்வரும் 21ஆம் திகதி அநுராதபுரத்தில் ஆரம்பிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் இடம்பெறும் 100 பிரசாரக் கூட்டங்களில் அவர் பங்கேற்க உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button