ட்ரம்ப் – நெதன்யாகு போர் நிறுத்த பேச்சு வார்த்தை: இஸ்ரேல் மறுப்பு

காசா போர்நிறுத்த பேச்சு வார்த்தை – டிரம் நெதன்யாகு கலந்துரையாடல் – இஸ்ரேல் பிரதமர் மறுப்பு. இஸ்ரேல் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுவிப்பு தொடர்பில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அதனை நெதன்யாகு மறுத்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்புடன் கலந்துரையாடவில்லையென பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இரண்டு ஆதாரங்களை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகிய போதிலும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் ட்ரமப்பின் எதுவித பதில்களும் வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை,எகிப்து, அமெரிக்கா மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் இன்று புதிய சுற்று போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *