இந்தியா

திமோர்-லெஸ்டே நாட்டின் உயரிய விருதுபெற்ற திரவுபதி முர்மு

ஜனாதிபதி திரவுபதி முர்மு 03 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக பிஜி நாட்டுக்கு சென்ற ஜனாதிபதி முர்மு, அந்நாட்டு ஜனாதிபதி ரது வில்லியம் மைவாலிலி கடோனிவியர் மற்றும் பிரதமர் சிதிவேனி ரபுகா ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது பிஜி (Fiji) நாட்டின் உயரிய கம்பானியன் ஆப் தி ஆர்டர் என்ற விருது இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அளிக்கப்பட்டது.

பிஜி நாட்டின் ஜனாதிபதி, திரவுபதி முர்முவுக்கு விருது வழங்கி கௌரவித்தார். இந்தியா-பிஜி நாடுகளுக்கு இடையிலான வலிமையான உறவுகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த கௌரவமளிக்கபட்டது.

02 ஆவது கட்டமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியூசிலாந்து சென்ற நிலையில் நியூசிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்சனை ஜனாதிபதி திரவுபதி முா்மு சந்தித்தாா்.

கல்வி, வா்த்தகம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினா்.

வெலிங்டனில் நடந்த நியூசிலாந்து சா்வதேச கல்வி மாநாட்டில் திரவுபதி முா்மு பங்கேற்று உரையாற்றினாா்.

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது பயணத்தின் மூன்றாவது கட்டமாக  திமோர்-லெஸ்தே சென்றடைந்தார்.

அங்கு ஜனாதிபதி ஜோஸ் ராமோஸ் அந்நாட்டின் உயரிய விருதான கிராண்ட்-காலர் ஆப் தி ஆர்டர் விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அளித்து கவுரவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *