இந்தியா

பங்களாதேஷில் அதிகரிக்கும் பதற்றம்; முன்னாள் கிரிக்கெட் வீரரின் வீட்டிற்கு தீ வைப்பு

பங்களாதேஷ் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரான மஷ்ரஃப் மொர்டசாவின் இல்லத்திற்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மஷ்ரஃபே மொர்டசா வெற்றிபெற்று இரண்டாவது முறையாக நரைல் – 2 தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2018 ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கிய மஷ்ரஃபே மொர்டசா முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியில் இணைந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்தார்.

இந்தநிலையில் பங்களாதேஷ் முழுவதும் பதற்றம் நிலவிவரும் நிலையில் மஷ்ரஃபே மொர்டசாவின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *